தமிழ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் உலக தாய்மொழி தினக் கொண்டாட்டம்

motherஉலக தாய்மொழி தினம் ஐக்கிய நாட்டு மன்றத்தின் அமைப்பான யுனெஸ்கோவால் 1999 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அத்தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 21 ஆம் தேதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மலேசியாவில் தமிழ் அறவாரியம் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாட்டை முதன்முதலில்Tamil foundation logo 2012 ஆம் ஆண்டில் செய்தது. அதனைத் தொடர்ந்து உலக தாய்மொழி தினத்தை தமிழ் அறவாரியம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது.

இப்போது உலக தாய்மொழி தினத்தை தமிழ் அறவாரியம், லிம் லியன் கியோக் கலாச்சார மற்றும் மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் & சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹால் மற்றும் இக்ராம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து கொண்டாடி வருகிறது.

இவ்வாண்டும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகளை தமிழ் அறவாரியம் மேற்கொண்டுள்ளது என்று அதன் தலைவர் இராகவன் அண்ணாமலை தெரிவித்தார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.2.2016) உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படும். இவ்வாண்டின் உலக தாய்மொழி தினக் World Mother Language Day 2016(1)கொண்டாட்டத்தின் கருப்பொருள் “தரமான கல்வி, மொழி பயன்பாடு மற்றும் கற்றல் அடைவுநிலை” என்பதாகும்.

பெப்ரவரி 21 இல் கொண்டாடப்படவிருக்கும் உலக தாய்மொழி தினக் கொண்டாட்டத்தில் பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரி மற்றும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகிய இரு அமைப்புகளும் பங்கேற்கவிருக்கின்றன.

இந்நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிரிக்பீல்ட்ஸ் ஆசியா கல்லூரியில் பிற்பகல் மணி 2.30 லிருந்து மாலை மணி 7.00 வரையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும்.

இந்நிகழ்ச்சி உலகளவில் தாய்மொழிக்கு, தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சி என்பதால் பொதுமக்கள் திரண்டு வந்து பங்கேற்குமாறு இராகவன் அண்ணாமலை அழைப்புவிடுத்தார்.