வெளிநாட்டுத் தொழிலாளர்களை கொண்டுவருவது முடக்கப்பட்டுள்ளது என்ற மலேசியாவின் அறிவிப்பு “கண்துடைப்பு”, பங்காள தேச அமைச்சு கூறுகிறது

hamidiadmitsமலேசியாவுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டு வரும் திட்டம் முடக்கப்பட்டிருப்பதாக மலேசியா வெளியிட்டுள்ள அறிவிப்பை ஒரு “கண்துடைப்பு” என்று பங்காள தேச வெளிநாட்டவர் அமைச்சின் இடைக்காலச் செயலாளர் வர்ணித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தப்படி பங்காள தேச குடிமக்கள் மலேசியாவில் வேலை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று பேகம் சம்சுனாஹர் கூறியதாக டாக்கா டிரிபியூன் கூறுகிறது.

“அது ஒரு கண்துடைப்புதான். வெளிநாட்டவர்களை வேலைக்கு எடுப்பதை எதிர்க்கும் தரப்பினரை சாந்தப்படுத்தப்படுத்துவதற்காக மலேசிய அரசாங்கம் அந்த அறிவிப்பைச் செய்துள்ளது.

“இரு நாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி பங்களா தேசம் அதன் தொழிலாளர்களை மலேசியாவுக்கு அனுப்பும்”, என்று சம்சுனாஹர் நேற்று கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.