ஸைட் இப்ராகிம்: போலீஸ் படைத் தலைவரே, எனக்கும் சட்டம் தெரியும்!

I know the lawபிரதமர் நஜிப்பை பதவியிலிருந்து அகற்ற அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யும் பணியில் இறங்கியிருக்கும் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கர் விடுத்திருந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளார்.

“எனக்கு சட்டம் தெரியும். நாங்கள் காரியத்தைச் சட்டப்படி செய்வோம். எனக்கு 65 வயதாகி விட்டது. நான் சிறை செல்ல விரும்பவில்லை”, என்று ஸைட் இப்ராகிம் மலேசியாகினியிடம் கூறினார்.

ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் சட்ட எல்லைக்குட்பட்டது எது என்று ஸைட்டுக்கு தெரிந்திருக்க வேண்டும் காலிட் நேற்று அவரை எச்சரித்திருந்தார்.

நாடாளுமன்றம் அல்லது ஒரு பொதுத் தேர்தல் வாக்களிப்பு மூலமாக மட்டுமே ஒரு பிரதமரை பதவியிலிருந்து அகற்ற முடியும். வேறு எந்த வழியில் செய்தாலும் அது சட்டவிரோதமானதாகும் என்ரு காலிட் உபதேசம் செய்திருந்தார்.

அனைவருக்கும், போலீஸ் தலைவர் உட்பட, சட்டத்தைப் பின்பற்றும் கடப்பாடு உண்டு என்று ஸைட் இப்ராகிம் பதில் அளித்தார்.

“ஒன்றுகூடும் உரிமை”

மக்கள் தங்களுடைய கருத்துகளை பல்வேறு வகையில் தெரிவிக்கலாம், அதில் ஒன்றுகூடுவது அடங்கும் என்றாரவர்.IGP Khalid2

“நாம் நமது கருத்துகளைத் தெரிவிக்க முடியும்; நமக்கு உரிமைகள் இருக்கின்றன, நீர் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பவில்லை என்றால், அது உமது விருப்பமாகும்.

“நஜிப் பற்றி நாங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீர் எங்களுக்குச் சொல்லக்கூடாது. நாங்கள் ஒன்றுகூடி எங்களுடையக் கருத்தைச் சொல்லும் உரிமை எங்களுக்கும் உண்டு”, என்று ஸைட் இப்ராகிம் கூறினார்.

சட்ட எல்லைக்குட்பட்டு மக்கள் தங்கள் கருத்துகளைச் சொல்ல விரும்புவது பற்றி போலீஸ் கவலைப்படக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்.

பிரதமர் நஜிப் அவரது பதவியைத் துறக்க வேண்டும் என்று கோருவதற்காக மார்ச் 27 இல் ஒரு பெரும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஸைட் இப்ராகிம் நேற்று ஆலோசனை கூறியிருந்தார்.