பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின், பினாங்கில் மாநில அரசு தொடர்புடைய நிறுவனங்களில் இயக்குனர் பதவிகளை இழந்த இரு சட்டமன்ற பிரதிநிதிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் முடிவை அக்கட்சியின் அரசியல் பிரிவு நிலைநிறுத்தி இருப்பதாக இன்று தெரிவித்தார்.
“அவர்களைத் தற்காப்பது என அரசியல் பிரிவு முடிவு செய்துள்ளது. அவர்களைப் பதவி நீக்கியதை நாங்களும் எதிர்க்கிறோம்.
“அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் மாநில அரசுக்குப் பின்னூட்டும் வழங்கும் பணியைத்தான் செய்தார்கள்”, என அஸ்மின் கூறினார்.
பினாங்கு சட்டமன்றத்தின் நவம்பர் மாத அமர்வின்போது கடலிலிருந்து நிலத்தை மீட்டெடுக்கும் எல்லாத் திட்டங்களையும் நிறுத்தி வைக்கக் கோரி அம்னோ கொண்டுவந்த தீர்மானத்தின்போது வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்ட இரு பிகேஆர் பிரதிநிதிகள் ஜிஎல்சி நிறுவனங்களில் அவரகள் வகித்த இயக்குனர் பதவிகளிலிருந்து தூக்கப்பட்டார்கள் என மலேசியாகினி நேற்று தெரிவித்திருந்தது.
சீனர்களை தவிர்த்து, ஏனைய மலாயக்காரர்களோ அல்லது தமிழர்களையோ டி.எ.பி. கழுத்தறுக்கும் இவ்வேளையில், பி.கே.ஆர். தங்களது உறுப்பினர்களுக்கு கை கொடுக்கும் அஸ்மினின் செயல் பாராட்டத் தக்கதாகும்.
azmin இவன் உம்நோவிடம் பணம் வாங்கி நம்ம khaliD ibrahim போலவே அனவருக்கும் selangor வாழ மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பது உண்மை அன்றிலிருந்து மக்களுக்கு போராடுவது அன்வார் mat sabu மற்றும் ramasamy lim guan eng lim kit siang அவர்களே ஆவர் pkr anjadikaranungga perumpalum irandaan கெட்டணுங்க உம்நோவிடம் பணம் வாங்கி எதிர் கட்சிக்கு துரோகம் செய்வதே இவனுங்க வேலை