அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசினின் நடத்தையால் வெறுப்படைந்துள்ள பிரதமர்துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான், ஒன்று முகைதின் பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் நஜிப்பை எதிர்க்க வேண்டும் என்றார்.
“அவரது நடத்தை அடிநிலைத் தலைவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இல்லை. கட்சிக் கொள்கைகளுடன் ஒத்துப்போக முடியவில்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது கட்சித் தேர்தலில் தலைவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டும்”, என அஸலினா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
முகைதின் இன்னமும் பாகோ எம்பிதான் என்பதையும் அம்னோவின் உதவியுடன்தான் அவர் எம்பி ஆனார் என்பதையும் அவருக்கு அஸலினா நினைவுபடுத்தினார்.
அப்படி போடுங்க அக்கா! காக்கா பணபலம் பிரதமருக்கு எதிரானா அணியை திரட்டுகிறது! முதலில் காக்காவின் முதுகெலும்பை
கழுட்டவும்,மற்றவை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்னு ……..யாரோ ஒரு ஜோசியன் சொன்னான்!