காஜாங், தமிங் சாரி சாலைச் சந்திப்பில் போலீஸ்காரர் ஒருவரைக் கொள்ளையர்கள் தாக்கிக் காயப்படுத்தினர்.
காலை மணி 6.30க்கு, அப்பகுதியில் காவல் சுற்றில் இரு போலீஸ்காரர்களில் ஒருவர் சாலையை மறித்துக்கொண்டு இரண்டு கார்கள் நிற்பதைக் கண்டனர். அவர்களில் ஒருவர் கார்களை அணுகி அந்த இடத்தைக் காலி செய்யுமாறு அதில் உள்ளவர்களிடம் கூறினார்.
“போலீஸ்காரர் அவ்வாறு சொன்னது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. காரைவிட்டு இறங்கி வந்து அவரை அடித்துப் போட்டனர். அந்த இடத்தை விட்டு ஓடுமுன்னர் போலீஸ்காரரின் பையையும் எடுத்துச் சென்றனர். அதில் அவரது பணப்பை, கைபேசி ஆகியவை இருந்தன”, என காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வில்லி ரிச்சர்ட் கூறினார்.
சம்பந்தப்பட்டவர்களைத் தேடும் முயற்சி நடப்பதாக வில்லி கூறினார்.
_பெர்னாமா