ஜோகூர் ‘சிங்கே’ விழாவில் 300,000 பேர் கலந்துகொண்டு வரலாறு படைத்தனர்

j sulநேற்றிரவு  ஜோகூர்  ஆட்சியாளர்   சுல்தான்  இப்ராகிம்  அல்மர்கும்  சுல்தான்  இஸ்கண்டர்  தொடக்கிவைத்த  ‘சிங்கே’  விழாவில்  300,000-க்கும்  மேற்பட்டோர்  கலந்து  கொண்டனர்.

உள்ளூர்  மக்களும்  சுற்றுப்பயணிகளும்,  குறிப்பாக  இளைஞர்கள்  பெரும்  எண்ணிக்கையில்  அவ்விழாவுக்கு  வந்திருந்தது  “பிரமிக்கத்தக்கது”  என  மாநில  சுற்றுலா,  வர்த்தகம்,  பயனீட்டாளர் விவகாரங்களுக்குப்  பொறுப்பான  ஆட்சிக்குழு  உறுப்பினர்  டீ  சியும்  கியோங்  கூறினார்.

“என்னுடைய  அனுபவத்தில்  இவ்வளவு  பெரிய  கூட்டத்தை  இதற்குமுன்  பார்த்ததில்லை. கூட்டத்தில்  பெரும்பாலோர்  இளைஞர்கள்.  அவர்கள்  ஜோகூர்  சுல்தானுக்குத்  தங்கள்  விசுவாசத்தையும்  தெரிவித்துக்  கொண்டனர்”, என்றாரவர்.

ஜோகூர்  மந்திரி  புசார்  முகம்மட்  காலிட்  நோர்டினும்  விழாவுக்கு  வந்திருந்தார்.