எஸ்ஆர்சி-இலிருந்து பணம் மாற்றிவிடப்பட்டது உண்மை என்பதை முன்னாள் ஏஜி-இன் மெளனம் மெய்ப்பிக்கிறது

gani pமுன்னாள்  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி  பட்டேலின்  மெளனம்,  அவர்  அரசுத்  தொடர்புடைய  எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  நிறுவனத்திலிருந்து  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்குக்குப்  பணம்  மாற்றிவிடப்பட்டதற்கான  ஆதாரத்தை  முன்னாள்  துணைப்  பிரதமர்   முகைதின்  யாசினிடம்  காண்பித்திருக்கலாம்  என்பதைக்  காட்டுகிறது.

இதைத்  தெரிவித்த  பாஸ்  பொக்கோக்  சேனா  எம்பி  மாபுஸ்  ஒமார்,  பணம்  மாற்றிவிடப்பட்டதில்  குற்றச்செயல்  நிகழ்ந்திருக்கிறது  என  முகைதின்  கூறியதை   கனி  மறுக்கவில்லை  என்றார்.

“முகைதினின்  கூற்றுக்கு  எதிராக  கனி  மெளனம்  காப்பது  ஏன்  என்று  மலேசியர்கள்  கேட்கிறார்கள்”, என்று  மாபுஸ்  அறிக்கை  ஒன்றில்  கேட்டிருந்தார்.

அது  பொய்யான  குற்றச்சாட்டு  என்றால்  கனி  அதை  மறுத்திருப்பார்  என்றாரவர்.