‘முகைதின் அவர்களே, உங்களால் அன்வாரைக்கூட வெல்ல முடியவில்லையே’

mynet1998-இல்  அன்வார்  இப்ராகிம்  அரசாங்கப்  பதவியிலிருந்தும்  அம்னோவிலிருந்தும்  வெளியேற்றப்பட்டபோது  நாடே  அல்லோலகல்லோலப்  பட்டது. ஆயிரகக்கணக்கானோர்  தெருக்களில்  இறங்கி  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

இப்போது முகைதின்  யாசின்  இரண்டாவது  இடத்திலிருந்து  கழட்டி  விடப்பட்டப்போது  எவ்வித  சலசலப்பும்  இல்லை.

இரு  சம்பவங்களை  ஒப்பிட்டு   அன்வார்  அளவுக்கு  முகைதினிடம்  செல்வாக்கு  இல்லை   என்று  அம்னோ- ஆதரவு  இணையத்தளமான  MyKMU.net  கூறியுள்ளது.

“அரசியலில்  அன்வாரிடம்  தோற்றுப்போனார்  முகைதின்”, என்று  அது  குறிப்பிட்டது.

அன்வாரை  வெல்ல  முடியாத  முகைதின்,  நஜிப்பையும்  நாடு  முழுவதுமுள்ள  அம்னோ   உறுப்பினர்களையும்  எதிர்த்து  என்ன  சாதிக்கப்  போகிறார்  என்று  அது  வினவியது.

முகைதினுக்குச்  சில  அறிவுரைகளையும்  அது  முன்வைத்தது.

“காலஞ்சென்ற  கபார்  பாபாவிடம்  கற்றுக்கொள்ளுங்கள்.  உங்களைப்  போன்றா  அவர்  நடந்து  கொண்டார்”,  என்று  அது  வினவியது.

மலேசியாவில்  தலைவரை  எதிர்க்கும்  துணைத்  தலைவரின்  அரசியல்  வாழ்க்கை  நீண்ட  காலம்  நிலைக்காது. முன்னாள்  பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு  அதற்கு  ஓர்  எடுத்துக்காட்டு.

அன்வார்  மகாதிருடன்  மோதிக்கொண்டபோது  அவரது “தப்புகளும்  தவறுகளும்”  தோண்டி  எடுக்கப்பட்டுக்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டார்.

“முகைதின் விசயத்தில்  அப்படியெல்லாம்  நடக்கவில்லை.  அவர்  ஒன்றும்  புனிதர்  அல்ல  என்றும்  சொல்லிக்கொள்கிறார்கள்”, என்றும்  MyKMU.net  கூறிற்று.