நஸ்ரி: பெரும்பாலோர் முகைதினை வெளியேற்றவே விரும்பினர்

wantஅம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்களில்  பெரும்பாலோர்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினைக்  கட்சியிலிருந்து  வெளியேற்றுவதையே  விரும்பியதாக  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறுகிறார்.

ஆனால்,   சுற்றுலா,  பண்பாட்டு   அமைச்சரும்  உச்சமன்றத்தின்  நியமன  உறுப்பினருமான  நஸ்ரிக்கு  அந்த  நோக்கம்  இருந்ததில்லை.  அவரை  இடைநீக்கம்  செய்யும்  நோக்கிலேயே  உச்சமன்றத்தில்  தீர்மானம்  கொண்டு  வந்ததாக  அவர்  தெரிவித்தார்.

“உச்சமன்றத்தில்  சிலர்  அவரைக்  கட்சியிலிருந்து  விலக்க  வேண்டும்  என்றனர்.  ஆனால்,  என்னுடைய  தீர்மானத்தைத்  தற்காத்துப்  பேசினேன்.  அவர் (முகைதின்)  துணைத்  தலைவரின்  பொறுப்புகளைச்  செய்யவில்லை  என்பதால்  அவரை  இடைநீக்கம்  செய்வதுதான்  சரி  என்று  வாதிட்டேன்”, என  நஸ்ரி  நேற்றிரவு  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.