பினாங்கு பிரதிநிதிகள் இருவர்மீது தேச நிந்தனை வழக்கு

sedபினாங்கு  தஞ்சோங்  எம்பி  இங்  வை  ஏய்க்கும்  ஸ்ரீடெலிமா  சட்டமன்ற  உறுப்பினர்  ஆர்எஸ்என்   ராயரும்   தேச  நிந்தனை  வழக்கை  எதிர்நோக்குகிறார்கள்.

கோத்தா  சிபூத்தே  எம்பி   தெரேசா  கொக்மீதும் கல்விமான்   அஸ்மி  ஷரோம் மீதும் இதேபொன்றுதான் தேச  நிந்தனை  வழக்கு  தொடுக்கப்பட்டு  பின்னர்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலியால்  கைவிடப்பட்டன.  ஆனால், இவ்விருவருக்கும்  அச்சலுகை  கிடைக்கவில்லை.  இருவரும்  தேச நிந்தனை  வழக்குக்குப்  பதில்  சொல்லியே  ஆக  வேண்டும்.

ராயர்,  அம்னோவுக்கு  எதிராக  ‘செலாகா’  என்ற  சொல்லைப்  சட்டமன்றத்திலும்  புக்கிட்- குளுகோர்  இடைத்  தேர்தலிலும்    பயன்படுத்தியதற்காக  தேச  நிந்தனை  வழக்கை  எதிர்நோக்கி உள்ளார்.

இங்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  ஆதரவாக   சீனமொழி  நாளேடு  ஒன்றில்  கட்டுரை  எழுதியதற்காக  தேச நிந்தனை  வழக்கு  தொடுக்கப்பட்டுள்ளது.