சீனர் சமூகத்தை வழிநடத்த ஒரு வலுவான தலைவர் மசீச-வுக்குத் தேவை என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அசீஸ் கூறினார்..
அந்தத் தலைவர் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கைவிட ஆற்றல் மிக்கவராக இருத்தல் வேண்டும் அப்போதுதான் மசீச இழந்துவிட்ட சீனர்களின் ஆதரவைத் திரும்பப் பெற முடியும் என்றாரவர்.
“நான் மசீச உறுப்பினன் அல்லன். ஆனால், மசீச-வுக்கு வலுவான சீனத் தலைவர் தேவை.
“லிம், ஆற்றல்வாய்ந்த தலைவர் என்பதை மறுக்க முடியாது.
“மசீச தலைவர் லிம்மைவிடவும் ஆற்றல்மிக்கவராக இல்லை என்றால் அவர்களால் எப்படி சீனர்களின் ஆதரவைத் திரும்பப் பெற முடியும்?”, என நஸ்ரி மலேசியாகினிக்கும் பிரி மலேசியா டூடே-க்கும் வழங்கிய நேர்காணலில் வினவினார்.
இனி, இது கனவிலும் நனவாத ஒன்று!.
அம்னோவுக்கு ஆமாம் சாமீ போடும் வரை, மா இ க,& மா சி சா எந்த ஒரு ஆட்ற்றல் மிக்க தலைவனையும் உருவாக்க முடியாது.