முன்னாள் அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக் மரணத்தில் தொடர்புள்ளதாகக் குற்றஞ் சாட்டப்பட்ட அதன் அதிகாரி ஒருவருக்கு எம்ஏசிசி மீண்டும் பதவி உயர்வு கொடுத்திருப்பதை டிஏபி எம்பி டியோ நை சிங் கண்டித்திருக்கிறார்.
ஹிஷாமுடின் ஹஷிம் எம்ஏசிசி உளவுப் பிரிவு இயக்குனராக பணி உயர்வு பெற்றிருப்பதாய் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்குமுன் அவர் சாபா எம்ஏசிசி இயக்குனராக இருந்தார்.
தியோவின் மரணத்துக்கு, அவரை விசாரணை செய்த எம்ஏசிசி அதிகாரிகள் உள்பட அடையாளம் தெரியாத சில நபர்களின் சட்டவிரோத செயல்கள்தாம் காரணம் என முறையீட்டு நீதிமன்றம் 2014 செப்டம்பரில் தீர்ப்பளித்திருந்தது.
ஆனால். இதுவரை எம்ஏசிசி அதிகாரிகளில் எவரும் தியோவின் மரணத்துக்குப் பொறுப்பாக்கப்படவில்லை என டியோ தெரிவித்தார்.
“முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெறும் காகிதத் தீர்ப்பாகவே ஆகிவிட்டது. அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை”, என்றார்.
ஹிஷாமுடினுக்கு இது இரண்டாவது பணி உயர்வாகும். தியோவின் மரணத்தை அடுத்து அவர் நெகிரி செம்பிலான் எம்ஏசிசி இயக்குனராக நியமிகக்ப்பட்டார்.
சீனர்களுக்கு ஒன்றென்றால் கொதித்தெழுகிறார்கள், டி.எ.பி. தலைவர்கள். ஆனால், முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் போலீஸ் லாக்கப்புகளில் போலீசாரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். எந்த ஒரு டி.எ.பி. காரனும் வாயை திறக்க மாட்டானே! இந்த இன வெறியர்களுக்கு கார் கதவு திறக்க ஒரு ராமசாமியும், சப்பாத்து துடைக்க ஒரு குலசேகரனும் இருக்கிறார்களே!
ஐய..இந்திய இளைஞர்கள் செய்யிற ஹட்டம் ஹன்னியாயம் கொன்ஞம் ஹீள்ளே சார்…ஹென்கும் கொலை கொல்லெய் இன்னும் பல பல…பட்டால் தான் தெரியும் அதன் வலி….”நோட் ஆல்”
அவன் இனத்துக்கு அவன் துடிக்கிறான் , இவன் இனத்துக்கு இவன் செய்தது என்ன ? உதவ மறுப்பது என்ன காரணம் ? இவனுங்க கூட்டமாக சென்று குடும்பத்தையே கொலைசெய்வது , நடுரோட்டில் வெட்டி சாய்ப்பது , வேண்டாம் – அடிக்கிக்கொண்டே போகலாம் ! ஊர் வாயில் அடிப்பட்டவன் லாகப்பில் மாண்டான் ! போகட்டும் போ !!