இந்தியப் பெருங்கடல் தீவான லா ரீயுனியனில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 370 விமானத்தின் இரண்டாவது பகுதியாக இருக்கலாம் என ஒரு செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடலோரமாக மெதுஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜோன்னி பெக் என்பார் அதைக் கண்டெடுத்தார் என ஏஎப்பி செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.
இதே மனிதர்தான் விமானத்தின் சிறகுப் பகுதி எனக் கருதப்படும் பொருள் ஒன்றைக் கடந்த ஆண்டு ஜூலையில் கண்டெடுத்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பொருள் காணாமல்போன விமானத்தின் ஒரு பகுதி என்றே உறுதியாக நம்பப்படுகிறது என ஏஎப்பி கூறிற்று.
எம்எச் 370, 2014 மார்ச் 8 அதிகாலையில் 239 பயணிகளையும் விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் நொக்கிப் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போனது.
தற்போது அமோகமாக பேசப்படும் 2.6 என்ற அற்புதமான நம்பரை திடீரென்று மக்களின் திசை திருப்ப வந்த செய்திதான் இந்த எம் எச் 370 விமானத்தின் உடைந்த பாகம்.