இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வந்தபோது பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைவிட்டு விலகியே இருந்தனர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை விடுக்கும் பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்ட முகைதினுடன் பிஎன் எம்பிகள் சகவாசம் வைத்துக்கொள்ள விரும்பாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் அவரைச் சுற்றிலும் பக்கத்தான் ஹராபான் எம்பிகளைத்தான் காண முடிந்தது.
டிஏபி கட்சியின் செய்தித்தளமான ரோக்கெட்கினி. காம் சில படங்களை வெளியிட்டிருந்தது. ஒன்றில் பாகோ எம்பி பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குடனும் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலியுடனும் காணப்பட்டார். இன்னொன்றில் டிஏபி தலைமைச் செயலாளருமான லிம்முடன் உரையாடியவாறு நடந்து செல்கிறார்.