நஜிப்பின் ரிம2.6 பில்லியன் வழக்கில் ஊழல் நிகழ்திருப்பதற்கான சான்று இல்லை

azalinaபிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கிடம்   ரிம2.6 பில்லியன்  அரசியல்  நன்கொடை  வழங்கப்பட்டதில்  ஊழல்  நிகழ்ந்திருப்பதாக  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி) கருதவில்லை  என  புத்ரா  ஜெயா  கூறியது.

“ஏஜி  அலுவலகத்துக்கு  அனுப்பி  வைக்கப்பட்ட  அதன்  விசாரணை  அறிக்கையில்  பிரதமர்  ஊழல்  செய்தார்  என்ற  குறிப்பே  கிடையாது”. நேற்று  நாடாளுமன்றத்தில்  வழங்கிய  எழுத்துப்பூர்வமான  பதிலில்  பிரதமர்துறை  அமைச்சர்  அஸலினா  ஒத்மான்  இவ்வாறு  கூறினார்.

“கூட்டரசு  அரசமைப்பின்   பகுதி  145(3)-இன்படி  ஒரு  வழக்கை  நீதிமன்றத்துக்குக்  கொண்டு  செல்வதா,  வேண்டாமா  என்று  முடிவெடுக்கும்  அதிகாரம் சட்டத்துறைத்  தலைவர்  அபாண்டி  அலிக்கு  உண்டு”,  என்றாரவர்.