ஹாடி: குடிமக்கள் தீர்மானம் ஒரு உருப்படாத திட்டம்

hadiகுடிமக்கள்  தீர்மானத்தின்வழி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  வெளியேற்றும்  முயற்சியை  “உருப்படாத”  திட்டம்  என  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  வருணித்தார்.

“அது  உருப்படாத  திட்டம்தான்.  காரணத்தோடுதான்  சொல்கிறேன்”, என்று  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  ஹாடி  கூறினார்.

ஜனநாயக  முறையில்  ஒரு  பிரதமரை  அகற்ற  வேண்டுமென்றால்  ஒன்று  நம்பிக்கை-இல்லாத்  தீர்மானத்தின்  மூலமாக  செய்ய  வேண்டும்  அல்லது  தேர்தல் மூலமாக  செய்ய  வேண்டும்.

நம்பிக்கை-இல்லாத்  தீர்மானம்  கொண்டு வருவது  நடவாத  செயல்,  ஏனென்றால்  அதற்கு  அம்னோ/ பிஎன்  எம்பிகளின்  பெரும்பான்மை  ஆதரவு  தேவைப்படும்  என்றாரவர்.

“நாம்  மட்டுமே  மாற்றத்தை  விரும்பி  அம்னோ  பிரதிநிதிகள்  விரும்பாவிட்டால்  நோக்கம்  எப்படி  நிறைவேறும்?”, என்றவர்  வினவினார்.