பிரதமர் நஜிப்பிற்கு மாற்று யார் என்ற சர்ச்சையை நிறுத்துமாறு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்
மாறாக, மலேசியாவை காப்பாற்றக் கோரும் மக்கள் பிரகடனத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், அடுத்து வரும் அரசாங்கத்தில் ஊழல் மற்றும் அதிகார அதுமீறல் ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவது பற்றி திட்டமிட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனைச் செய்த பின்னர், நாம் அனைவரும் பேரரசரின் அரண்மனைக்குச் சென்று பிரகடனத்தை அவரிடம் வழங்கலாம் என்று ஸைட் அவரது வலைத்தளத்தில் இன்று எழுதியுள்ளார்.
மலேசியாவை காப்பாற்றும் இயக்கம் நஜிப்பை அகற்றி அரசு அமைப்புகளில் சீர்திருத்ததைக் கொண்டு வரும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
ஆனால், இவ்வியக்கத்தின் முக்கியமானவர்களில் ஒருவரும், டிஎபியின் மூத்த தலைவருமான லிம் கிட் சியாங், அவர்களின் திட்டம் வெற்றி பெற்றால் அடுத்தப் பிரதமர் யார் என்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை என்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
‘அடுத்து வரும் அரசாங்கத்தில், ஊழல்,அதிகார துஷ்பிரயோகம், லஞ்ச லாவண்யம், ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவது பற்றி திட்டமிட வேண்டும்’ என இந்த முன்னாள் அமைச்சர் கூறுகிறார். தஞ்சோங் ரம்புத்தான் மனநோய் மருத்துவமனையில், படுக்கை ஏதும் காலியாக உள்ளதா என யாராவது சொல்லி அனுப்புங்கள். இதோ ஒரு ‘பேஷன்ட்’.