சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது குறித்த சட்டத் திருத்தம் தயார் என்று புத்ரா ஜெயா அறிவிப்பு செய்திருக்கலாம். ஆனால், அதனை நாடாளுமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதற்கான ஓர் உறுதியான தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது என்று டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறுகிறார்.
இதற்கான சட்ட வரைவு இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரின் கருத்துகளுக்காக காத்திருக்கிறது. அது தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் நான்சி ஸூக்கிரி சூளுரைத்திருந்தது குறித்து கருத்துரைக்கையில் குலா இவ்வாறு கூறினார்.
வாக்குறுதி அளிக்கலாம். ஆனால், ஓர் உறுதியான தேதி அறிக்கப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதோடு பெரும் கவலைக்கு இடமளிக்கிறது என்றாரவர்.
2009 ஆம் ஆண்டிலிருந்து இது போன்ற முன்மொழிதல்களும் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டிய குலா, ஆனால் எவ்வித விளைவுகளும் ஏற்படவில்லை என்றார்.
சிறார்கள் ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவதைத் தடை செய்ய அமைச்சரவை 2009 ஆண்டில் முடிவு செய்ததைத் தொடர்ந்து, தேவையான சட்ட திருத்தங்களை ஆய்வு செய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், எதுவும் செய்யப்படவில்லை என்றாரவர்.
தேதி ஒன்றும் தேவை இல்லை -எல்லாமே பொய்யும் பித்தலாட்டமும். உண்மையிலேயே நியாயமாக எல்லாம் இரக்க வேண்டும் என்றால் எப்போதோ நிலைமையை சீர் செய்து இருக்க முடியும். நிச்சய மற்ற நிலை இருந்தால் தானே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியும்–
ஷரியா சட்ட நிபுணர்கள் இன்னமும் இணங்கி வராத போது எப்படி தேதி கொடுப்பார்கள்…? இது எல்லாம் காதில பூ சுத்ரவேல…!
அவர்கள் மொழியில் சொல்லவேண்டும் என்றால் ” TUNGGU HARI KIAMAT “