கடந்த வாரம் குடிமக்கள் தீர்மானத்தில் கையொப்பமிடும் நிகழ்வின்போது டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்குடன் கைகுலுக்கியதைக் குறை சொல்வோரை பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இப்படித்தான் வருணித்தார்.
“இந்தக் கபடதாரிகள் என்னைக் கொண்டு டிஏபி-யைத் தாக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
“நான் கைகுலுக்கியதைப் பெரிய விவகாரமாக்கி இருக்கிறார்கள். இவர்களே டிஏபி தலைவர்களுடன் கூடிக் குலாவும் படங்களெல்லாம் வந்துள்ளனவே……
“சில அம்னோ தலைவர்கள் என்னை இனவாதி என்று கூறி என்னுடன் சேர்ந்து படமெடுத்துக் கொள்வதற்குக்கூட அஞ்சுகிறார்கள்.
“இந்த அரசியல்வாதிகள் சீனர் சமூகம் இந்தப் படத்தைப் பார்த்தால் தங்களின் வாக்குகள் குறைந்து போகுமே என்று கவலைப்படுகிறார்கள்”, என இப்ராகிம் அலி கூறினார்.
தம்மைக் குறைகூறுவோரை நோக்கி “கபடதாரிகளாக” இருக்க வேண்டாம், நல்ல தலைவர்களாக இருக்கப் பாருங்கள் என்றவர் அறிவுறுத்தினார்.
லிம் கிட் சியாங்கை இரண்டு வருடங்கள் உள்ளே தள்ளியவர் மகாதிமிர் [1987முதல்1989 வரை]. லிம் கிட் சியாங் ஓர் இனவெறியன், டி.எ.பி. ஒரு இனவாத கட்சி என பல ஆண்டுகளாக கூட்டம் போட்டு அரசியல் நடத்தியது பெர்காசாவும் அதன் தலைவர் இப்ராஹிம் அலியும். ஆனால் இன்று…………….!அரசியல்ல என்னதான் நடக்குது?…………..தலையே சுத்துது போங்கோ.