டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், மலேசியாவைக் காக்கும் இயக்கத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுடன் இணைந்து பணியாற்றுவதை வைத்து அவரைக் கபடதாரி என்று குறைகூறுவோரைப் பொருட்படுத்தவில்லை.
“என்னைக் கொள்கை இல்லாதவன் என்றும் சந்தர்ப்பவாதி என்றும் சொல்கிறார்கள்.
“50 ஆண்டுகளாக பணம், பொருள், பதவி – எதுவும் என்னை ஈர்த்ததில்லை. இப்போது 75 ஆகிறது. இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே சுறுசுறுப்பாக இருக்க முடியாது. அதனால் எதன்மீதும் ஆசைப்படவோ மயங்கவோ வேண்டிய அவசியம் எனக்கில்லை”, என மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் லிம் கூறினார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வெளியேற்றுவதே நாட்டுக்கு நல்லது என்று பட்டதால் மகாதிருடன் இணைந்து பணியாற்ற முடிவெடுத்ததாக அவர் கூறினார்.
“இப்போதுள்ளதைவிட ஐக்கியமான ஒரு நாடு. இப்போதுள்ளதைவிட நீதியும் வளப்பமும் நிறைந்த சமுதாயம்- இவையே தம் வாழ்நாள் குறிக்கோள்”, என்றும் லிம் குறிப்பிட்டார்.
மகாதிருடன் இணைந்து பணியாற்றுவது முன்னாள் பிரதமரின் கடந்தகால செயல்களை மறந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என்றும் கிட் சியாங் கூறினார்.
ஆனால். கடந்த காலம் நாட்டைப் பாதுகாக்கும் முயற்சிக்குத் தடையாக அமைந்து விடக் கூடாது.
“கடந்த காலத்தில் பல தவறுகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், இப்போது எது தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும்- நிகழ்காலத்தின்மீதும் வருங்காலத்தின்மீதும் கவனம் செலுத்துவதா, கடந்த காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதா”, என்று லிம் வினவினார்.
“முன்னாள் பிரதமர் மகாதிருடன் பணியாற்றுவது, அவரது கடந்தகால செயல்களை மறந்துவிட்டதாக நினைக்க வேண்டாம்” என லிம் கிட் சியாங் கூறுகிறார். இவர்களை மகாதிமிர் எவ்வளவு கீழ்த்தரமாக பேசியுள்ளார் என்பதற்கு இதோ ஓர் உதாரணம். 1987ம் ஆண்டு. 106 பேரை விசாரணையின்றி சிறையிலடைத்தார், மகாதிர். இச்செயலை கண்டித்து அன்றைய டி.எ.பி.யின் மற்றொரு தலைவரான லீ லாம் தாய், நியு சீலாந்து சென்று, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சிறையில் அடைக்கப் பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, கையெழுத்து வாங்கி, அக்கடித்தத்தை மகாதிரிடம் கொண்டு வந்து கொடுத்தார் லீ லாம் தாய். அக்கடிதத்திற்கு இப்படி பதிலளித்தார் மகாதிர்,” மலேசியா ஒரு அருமையான வளம் கொழிக்கும் நாடு. இதனை சீர்குழைத்து குட்டிச்சுவர் ஆக்கவேண்டும் என்பதற்காகவே, சீனர்களையும், இந்தியர்களையும் இந்நாட்டிலே கொண்டு வந்து கொட்டி, நாட்டையே கெடுத்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்த சீனர்களும், இந்தியர்களும் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல, உங்களுக்கு வேண்டுமா? அனுப்பி வைக்கிறேன். அப்போ தெரியும் இவர்களைப் பற்றி” என்று எழுதி அனுப்பினார் மகாதிர். {ALIRAN MONTHLY 1988}. இப்போது சொல்லுங்கள், இதனை ஜீரணிக்க முடிகிறதா? லிம் கிட் சியாங் ஜீரணிக்கிறார். என்னால் முடியவில்லை.
யு change யுவர் racisme