பிகேஆர்: அரசியல் கருத்துவேறுபாட்டின் காரணமாக மகாதிரின் பதவியைப் பறிப்பது சரியல்ல

surenபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிருடன்  அரசியல்  கருத்துவேறுபாடு  கொண்டிருக்கலாம்.  அதற்காக  மகாதிரை  தேசிய  எண்ணெய்  நிறுவனமான  பெட்ரோனாசின்  ஆலோசகர்  பதவியிலிருந்து  விலக்கியது  சரியல்ல  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  என். சுரேந்திரன்  கூறினார்.

“மகாதிரின்  நியமனம்  முடிவுக்கு  வருவதாக  அறிவித்த  பிரதமர்துறை  அலுவலகம்(பிஎம்ஓ) ‘அவர்  நடப்பு  அரசாங்கத்தை  ஆதரிக்காததுதான்’  காரணம்  என்று  ஒப்புக்கொண்டிருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது.

“மகாதிர்  நடப்பு  அரசாங்கத்தை  ஆதரித்தாலும்  ஆதரிக்காவிட்டாலும்  பெட்ரோனாசின்  குறிக்கோள்களோ,  நிர்வாகமோ  அதனால் பாதிக்கப்படப்போவதில்லை..  பிரதமருடன்  கருத்து  வேறுபாடு  கொண்டிருக்கிறார்  என்பதற்காக  மகாதிரின்  நியமனத்தை  முடிவுக்குக்  கொண்டு  வருவது  சரியான  காரணமல்ல”, என  சுரேந்திரன்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.