ஸெட்டிக்குப் பிறகு பேங்க் நெகரா கவர்னராக பொறுப்பேற்பவர் 1எம்டிபி ஆலோசகராம்

zetiஸெட்டி  அஹ்தார்  அசீஸ்   16 ஆண்டுகள்  மலேசியாவின்  மத்திய  வங்கியான  பேங்க்  நெகாரா  கவர்னராக  இருந்து  விட்டு  ஏப்ரல் 30-இல்  பணி  ஓய்வு  பெறுகிறார். அவருக்குப்  பின்  அப்பொறுப்பை  ஏற்பவர்  மத்திய  வங்கியைச்  சேர்ந்தவராக  இருக்க  மாட்டார்  என்று  தெரிகிறது.

ஸெட்டிக்குப்  பிறகு  அப்பதவியை  ஏற்கப்  போகின்றவர்  நிதி  அமைச்சின்  தலைமைச்  செயலாளர்  இர்வான்  செரிகார்  அப்துல்லா  என்று  வால்  ஸ்திரிட்  ஜர்னல்  தெரிவித்துள்ளது.  அணுக்கமான  வட்டாரத்திலிருந்து  அதற்குத்  தகவல்  கிடைத்ததாம்.

இர்வான்  சர்ச்சைக்குரிய  1எம்டிபி  நிறுவனத்தின்  இயக்குனர்  வாரிய  உறுப்பினரும்  ஆவார்  என  அந்த  நிதியியல்  நாளேடு  கூறிற்று.