பினாங்கு தீவில் பல இடங்களிலும் பட்டர்வர்திலும் செபராங் பிறையிலும் டிஏபி சர்வாதிகாரத்தன்மை வாய்ந்தது என்று குற்றஞ்சாட்டும் பதாதைகள் காணப்பட்டுள்ளன.
பதாதைகளில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் படம் பொறிக்கப்பட்டு, “எங்களுக்குச் சர்வாதிகாரிகள் தேவையில்லை. பிகேஆர் டிஏபியுடனும் பிஎச்(பக்கத்தான் ஹராபான்)-உடனும் ஒத்துழைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
பதாதைகளில் “Angkatan Muda Keadilan Pulau Pinang (பினாங்கு பிகேஆர் இளைஞர் பிரிவு)” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. .
ஆனால், பினாங்கு பிகேஆர் இளைஞர் பிரிவு தனக்கும் அப்பதாதைகளுக்கும் தொடர்பில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.
பதாதைகள் பக்கத்தான் ஹராபான் பங்காளிக் கட்சிகளின் குறிப்பாக பிகேஆர், டிஏபி ஒத்துழைப்பைக் கெடுக்கும் நோக்கம் கொண்டவை என்று அப்பிரிவின் தலைவர் அஸ்ரோல் சானி அப்துல் ரசாக் கூறினார்.
உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும்
பினாங்கு மாநிலத்தில் bn பருப்பு வேகவில்லை ! குறுக்கு வழி தேடும் அடி முட்டாள்கள் !
இதெல்லாம் யார் செய்வார்கள் என்று சிந்திக்கும் மக்களுக்கு தெரியாதா?
இவன்கள் நாரிப்போனதை திசை திருப்பவே எல்லாம்– இவன்களின் தில்லு முள்ளுக்கா பஞ்சம்?
தன் முதுகை பார்க்க முடியாதவர்கள் இப்படித்தான் அடுத்தவனைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருப்பார்கள் ?
லிம் குவான் எங், கர்வம் பிடித்த சர்வாதிகாரி என்பதை மறுப்பதற்கில்லை. அப்பனும், மவனும் டி.எ.பி..யை விட்டு சற்று விலகியிருந்தால், டி.எ.பி. யின் நல்ல பெயர் நிலைத்திடும்.
லிம் குவான் எங் அப்படி ஒன்றும் இளிச்சவாயன் அல்ல. பதவிக்கு வரும் போதே தெரியும் தன் மேல் என்ன என்ன குற்றம் சாட்டுவார்கள் என்று. அம்னோவினரின் பாச்சா பலிக்காது!
ஆம, இவன் நல்லவனா, உண்மையானவன இருந்திருந்தால் பிகே ஆர் உடனே அதை அகற்றி இருக்கும், இவனும் நாத்தம் பிடிச்சவன் தானே கொஞ்சம் நாறினால் என்ன என்று இருக்கார்கள்.