இளைஞர், விளையாட்டு அமைச்சில் நிகழ்ந்துள்ள ரிம100 மில்லியன் கையாடல்மீது விசாரணை நடத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உத்தரவிட்டுள்ளார்.
“அவ்விவகாரம் மீது உடனடி விசாரணைக்குப் பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார்.
“ஊழலை நாட்டிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். அரசாங்கம் அதைப் பொறுத்துக்கொள்ளாது”, என அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறியதாக பெர்னாமா தெரிவித்தது.
அமைச்சுகளும் அரசாங்கத் துறைகளும் நிறுவனங்களும் கூடுதல் கவனத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று நஜிப் பணித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
அடுத்தவனென்றால் உடனே விசாரனை.ஆனால் தனக்கு வந்ததென்றால் அது நனகொடையாம்.மாமயா உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி.வாழ்க அம்னோ.
ஒரு CIMB ACC with USD 5M இருந்தால் போதுமானது இந்த பணத்தை விரைவில் மீட்கலாம்.
மக்கள் அனைவரும் GST மற்றும் பொருட்களின் விலை உயர்வால் அல்லாடி கொன்டிரிகிறோம். இதில் பணம் பற்றா விட்டால் இரண்டு வேலேய்க்கு செல்லே சொல்க்ரிர்கள் . ஆனால் நீங்கள் மட்டும் கோடி கணக்கில் பணத்தை சுருட்டி ஆடம்பர வாழ்கை . இன்னும் எத்தனை பேரடா இருகிங்கே ?
இது நாட்டில் நடந்த இரண்டாவது மிக பெரிய உழல்.இந்த உழலில் அமைச்சர் சம்பதம் படவில்லை என்றாலும் கூட நடந்தது விளையாட்டின் அமைச்சின் கீல்,ஆதலால் இதற்கு அமைச்சர் பொறுப்பேற்று பதவி விலகினால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாய் அமையும்.
எவ்வளவோ இன்னும் வெளியே வரவில்லை- முன்பு சொன்னது போல் இது பனிக்கட்டியின் நுனி தான்- அடியில் 90%. பலருக்கு தெரியும்-அதிலும் அம்னோ ஜென்மங்களுக்கு என்றுமே தெரியும்–காரணம் எல்லாருக்கும் பங்கு உண்டு.