இளைஞர், விளையாட்டு அமைச்சில் நிகழ்ந்துள்ள ரிம100மில்லியன் ஊழல் தொடர்பில் அதன் அமைச்சர் கைரி ஜமாலுடின் பதவி விலக வேண்டியதில்லை என்கிறார் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜா.
அவ்விவகாரத்துக்கு கைரி ஏற்கனவே முழுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளார் என்றாரவர்.
“பணத்தைக் கையாடியதாக உயர் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். எனவே, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அந்த அதிகாரிமீதுதான்”, என்றாரவர்
அதுவும் சரிதான்.இந்த அம்னோக்காரன் ஆட்சியில் எந்த அமைச்சாராவது இதுவரை நிகழ்ந்த எந்த சம்பவத்திற்காவது பொறுப்பேற்று பதவி விளகியிருக்கிறார்களா?
நம் இனத்திற்கு நேரும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கைகட்டி வேனிக்கை பார்க்கும்
ம இகா இது போன்ற அம்னோக்காரனுக்கு ஓர் இழுக்கென்றால் உடனே முந்திக்கொண்டு முதல் ஆளாக அறிக்கை விடுவது வாடிக்கைதானே.வாழ்க உங்கள் அம்னோ தொண்டு.
சப்பிகளுக்கு சப்பவா தெரியாது?
அதில் MIC காரன்கள் கை தேர்ந்தவர்கள் ஆயிற்றே.
எதற்கு ஆதரவு தெரிவிப்பது என்று கூட தெளிவில்லாமல் ஓர் இளைஞர் தலைவர்?
ம சீ ச ,கெரக்கான், மற்ற கட்சிகள் வாய் மூடி இருக்கும் பொழுது உனக்கு ஏன் இந்த வேலை ? கூஜா தூக்குவதர்கும் ஒரு அளவு உள்ளது. .சமுதாயத்தில் ஆயிரம் பிரச்னை மேலோங்கி உள்ளது. அரசு வழி தீர்க்க வழி பாருங்கள்.
எம் எ.எ.சி.விசாரணைக்குழு பினாங்கு முதல் அமைச்சரிடம் விசாரணை தொடங்கியதைப் போல் விளையாட்டு துறை அமைச்சரிடமும் விசாரணையை தொடங்க வேண்டும்…?
சபஸ் திருடனுக்கு திருடன் ஆதரவு
வணக்கம். முழு பொறுப்பு ஏற்றுகொண்டுள்ளார் என்றால் எப்படி. அதற்கு ஏதாவது செய்ய வேண்டாமா.
உங்களுக்கே மக்களின் ஆதரவு இல்லை, இதில் நீங்கள் கைரிக்கு ஆதரவா ? எடுப்புக்கு துடுப்பு ஆதரவு …
சி . சிவராஜாவை நேரில் பார்த்து பேச முடியாவிட்டாலும், அவரோடு நேரில் பேசுவதுபோல் எழுத ஆசைபடுகிறேன் ! அன்பரே !! கைரிக்கு ஏதாவது ஒன்று என்றால் இப்படி நீங்கள் துடிதுப்போவதை என்னி என் உடல் சிலிர்கிறது. உங்கள் SETIA KAWAN கொள்கைக்கு நான் தலைவணங்குகிறேன். உங்களின் இந்த புனிதமான , மிக உயர்ந்த ,போற்றத்தக்க செயலுக்காக நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் !உங்களைபோன்ற சிறந்த கொள்கைகொண்டவர்கள் , பத்து லட்சத்தில் ஒருவர்தான் இந்த பூமியில் பிறப்பார்கள் என்று ஜோதிடர்கள் சொல்லகேட்டேன்!!
ஆனால் …………….இந்திய சமுதாயத்தின் இன்றைய சூழ்நிலையை எண்ணி உங்கள் மனம் என்றாவது வேதனையில் கைரிக்காக துடித்ததுபோல் துடித்தது உண்டா ? பத்து சதவிகிதமாக இருந்த இந்திய சமுதாயம் திடிரென்று ஏழு சதவிதம் குறைந்ததை எண்ணி உங்கள் மனம் கைரிக்காக வேதனைபட்டதைபோல் இதற்கு பட்டதுண்டா ? அரசாங்க பல்கலைகழகத்தில் நமது மாணவர்களின் விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவதை எண்ணி உங்கள் மனம் வேதனையால் வெதும்பியதுண்டா ? முன்பு அரசாங்க அலுவலகத்தில் முப்பது சதவிகிதம் பேர்போட்ட நமது சமுதாயம் இன்று ஒரு சதவிகிதம் கூட மிஞ்சவில்லை என்பதை எண்ணி உங்கள் மனம் கைரிக்காக கதறியது போல இதற்கு வருந்தியதுண்டா ? நமது சமுதாயத்தின் இப்படிப்பட்ட சிறிய சிறிய சங்கதிகளுக்கெல்லாம் கலங்காத உங்கள் மனம் கைரிக்காக துடித்ததை என்னும் போது, உங்களோடு என்னை ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயமாக நான் உங்கள் கால் தூசிக்கு சமமாகமாட்டேன் !!! உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால் என் சின்னவீ ட்டை கூப்பிட்டு உங்களுக்கு சுத்தி போடசொல்வேன்
, உங்களின் இந்த சிறந்த சேவையில் கண் படாமல் இருக்க
தம்பி சிவராஜா ! இப்பொழுதுதான் எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது !!இரண்டு மாததிற்கு முன்பு பிரிக் பீல் கந்தசாமி ஆலய கலா மண்டபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் மேடை ஏறி வீர வசனமாக பேசிய பேச்சில், காதலியை போல் மதிமயங்கி உங்கள் திருக்கரத்தில் ” பசி பட்டினியால் வாடிடும் உயர்கல்வி பயிலும் ஏழை இந்திய மாணவர்கள் ” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை சமர்பித்தேனே , அதை காகிதமாக பாவித்து எதையாவது துடைத்து போட்டு விட்டிர்களா? ஒரு வேலை உங்களுக்கு தமிழ் படிக்க தெரியாதோ ! அந்த அறிக்கையில் எனது கைபேசி எண்களையும் கொடுத்திருந்தேன் , ஒரு CALL பண்ணி ” அடேய் பாலாஜி ! புதிதாக சமூகத்தை பற்றி பேச வந்துவிட்டாயா ! நான் மேடை ஏறி ஆயிரம் பேசுவேன் , ஆனால் எனது அதிகாரமும் ஒரு வரம்புக்கு உற்பட்டது என்பது உனக்கு தெரியாதா !! ” என்று போன் பண்ணி சொல்லியிருந்தால் நான் வாயை பொத்திக்கொண்டு இருந்திருப்பேனே , இப்படி அங்கும் இங்குமாக எழுதிக்கொண்டு இருக்க மாட்டேனே. தம்பி சிவராஜா ! உங்களுக்கும் , உங்களை சார்ந்தவர்களுக்கும் தீர்க்கதரிசனமாக ஒன்று சொல்கிறேன், மலேசிய இந்திய சமுதாயத்தின் இன்றைய அவல நிலையைபோக்க , நிச்சயமாக ஒரு நெல்சன் மண்டேலாவோ அல்லது ஒரு அன் சான் சூ கியோ எங்களுக்காக பிறக்காமலா போய்விடுவார்கள் ! அன்று உங்கள் சாயம் வெளுகாமலா போய்விடும் !!!
tapah பாலாஜி, விடாதிர்கள் … தொடரட்டும் உங்கள் சேவை ….