கேஎல், பினாங்கில் வீடுகள் கட்டுப்படியான விலையில் இல்லை

hseபேங்க் நெகராவின் 2015 ஆண்டறிக்கை, கோலாலும்பூரிலும் பினாங்கிலும் வீடுகள் கட்டுப்படியான விலையில் இல்லை என்கிறது.

கோலாலும்பூரிலும் பினாங்கிலும் ஒருவர் ஐந்தாண்டுகள் வேலை செய்து ஈட்டிய பணத்தில் எதுவும் செலவு செய்யாமல் இருந்தால் மட்டுமே கட்டுப்படியான விலையில் ஒரு வீட்டை வாங்க முடியும்.

வீட்டு விலைகள் சராசரி வருமானம் உள்ளவர்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன.

“கோலாலும்பூரிலும் பினாங்கிலும் வீடுகளுக்கு கட்டுப்படியான விலை இல்லை”, என அது கூறிற்று.