மலேசியா பயங்கரவாத மிரட்டலை எதிர்நோக்குவதாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கைகள் காதில் பூ சுற்றும் வேலை அல்ல என்று அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
தலைவர்களைக் கடத்துவது உள்பட பயங்கரவாதிகளால் நாட்டுக்கு மிரட்டல் ஏற்பட்டிருப்பது உண்மையே என்பதைத் துணைப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
“நாட்டின் பாதுகாப்புக்குப் பயங்கரவாதிகளால் மிரட்டல் ஏற்பட்டிருப்பது பற்றி பல அறிக்கைகள் விடுத்திருக்கிறேன். அவை, அரசியல் கட்டுக்கதைகள் அல்ல, உளவுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டவை”. பாலியில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஜாஹிட் ஹமிடி செய்தியாளர்களிடம் பேசினார்.
பயங்கரவாதத்தை வளர்த்து விட்ட பெருமை அரசாங்கத்தையே சாரும். அதனால் இது ஓர் அரசியல் கட்டுக்கதை அல்ல என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம்.
… நீ என்ன சொன்னாலும் நாங்கள் நம்பிடுவோமாஹ் ? போடா இந்தோனேசியா ….மவனே