எம்ஏசிசி குவான் எங் அலுவலகத்தை முற்றுகை இட்டதாம்: டிஏபி எம்பி கூறுகிறார்

ngமலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்(எம்ஏசிசி)  ஏற்கனவே  போட்டிருந்த  திட்டத்தை  மாற்றி  நேற்று  திடீரென்று  முதலைமைச்சர்  லிம்  குவான்  எங்கின்  அலுவலகத்தை  முற்றுகை  இட்டதாக  டிஏபி  தஞ்சோங்  எம்பி  இங்  வை  ஏய்க்  கூறினார்.

அதற்குமுன்  எம்ஏசிசி,  லிம்   ரிம2.8மில்லியனுக்கு  பங்களா  வீடு  வாங்கியது  குறித்த   விசாரணைக்கு  எப்போது  வேண்டுமானாலும்  தன்  அலுவலகம்  வரலாம்  என்று  கூறி  இருந்தது.

“அப்படிச்  சொன்ன  மறுநாளே  எம்ஏசிசி  அதிகாரிகள்  தங்கள்  தொடக்கத்  திட்டத்தை  மாற்றிக்கொண்டு  சிஎம்  அலுவலகம்  வந்தார்கள்,  திடீர்  சோதனை  நடத்த.

“எம்ஏசிசி-இடம்  ஏன்  இந்த  ஊசலாட்டம்?”, என  இங்  வினவினார்.

நேற்று  பிற்பகல்  3மணி  அளவில்  மலேசியாகினியும்  சிஎம்  அலுவலகம்  சென்றது,  ஆனால், அதன்  செய்தியாளர்களால்  எம்ஏசிசி  அதிகாரிகளைச்  சந்திக்க.  முடியவில்லை.  அவர்கள்  சிஎம்  அலுவலகத்தினுள்  இருந்தனர். மாலை  மணி  5-க்கு  அவர்கள்  வெளியேறியதாக  தெரிகிறது..