1எம்டிபி ஊழலை அம்பலப்படுத்தியதில் அவர் ஆற்றிய பங்குக்காக சரவாக் ரிப்போர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாசலை ‘உலகின் 50 பெருத் தலைவர்களி’ல் ஒருவர் என நியு யோர்கின் Fortune பத்திரிகை போற்றிப் பாராட்டியுள்ளது.
Fortune பத்திரிகை வெளியிட்டிருக்கும் 50 பேரடங்கிய பட்டியலில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் கோர்டன் புரவுனின் மைத்துனியான ரியுகாசல் பெயரும் இடம்பெற்றிருப்பதாக சுவிட்சர்லாந்து நாட்டின் என்ஜிஓ புருனோ மான்செர் நிதி(பிஎம்எப்) கூறியது.
அப்பட்டியலில் பல்வேறு துறைகளிலும் “உலகை உருமாற்றிக் கொண்டும் மற்றவர்களுக்கு எழுச்சியூட்டிக் கொண்டுமிருக்கின்ற” 50 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.
யார் என்ன கூறினாலும் அதிகாரத்திலும் பதவியிலும் பண பலத்திலும் இங்குள்ள பல ஈன ஜென்மங்களுக்கு ஏறாது. நியாயம் நீதிக்கு சாவுமணி அடித்து பல காலம் ஆகி விட்டது. தலைவன் என்று கூறிக்கொண்டு மரியாதையை எதிர்பார்க்கும் மடையர்கள். மக்களுக்கும் இதை பற்றி அக்கறை கிடையாது.