நாளை பிற்பகல் 12.30க்கு ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 2016 மக்கள் காங்கிரஸ் கூட்டத்திடம் அதிகமாகவே எதிர்பார்க்கப்படுகிறது.
1எம்டிபி விவகாரம் குறித்து சுயேச்சை விசாரணை நடத்தப்பட வேண்டும், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பவர் முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம்.
முதலில் “பேரணி” என்று கூறப்பட்டாலும் பின்னர் அது “அழைக்கப்பட்டவர்கள்- மட்டுமே கலந்துகொள்ளும்” ஒரு கூட்டம் என சைட் விளக்கினார்.
அது, மார்ச் 4-இல் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் எதிரணித் தலைவர்களும் கையெழுத்திட்ட குடிமக்கள் பிரகடனத்துக்குப் பிறகு நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
அதில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின், கெடா மந்திரி புசார் பதவியிலிருந்து தூக்கப்பட்ட முக்ரிஸ் மகாதிர், சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அமானா தலைவர் முகம்மட் சாபு, ஹாகாம் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், பெர்சே தலைவர் மரியா சின் என மொத்தம் 19 பேர் உரையாற்றுவார்கள் என்று சைட் கூறினார்.
“முகைதினும் மகாதிரும் கடைசியாக பேசுவார்கள். அதை உச்சக்கட்டம் என்று வைத்துக்கொள்ளலாம்”, என சைட் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அம்னோ உறுப்பினர்களும் கணிசமான எண்ணிக்கையில் கலந்து கொள்ளக்கூடும் என்றாரவர். பலர் அழைப்பிதழ்களைக் கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களாம்.
அதற்குப் பின் இவர்கள் சட்டத்தால் தடுத்து வைக்கப் படுவார்கள் என்பதை சூசகமாக சொல்லுகின்றாரோ?
இந்தக் கூட்டம் தான் இறுதி கூட்டாமா? தொடர்ந்து பேசட்டும்’பா! தமிழர்களுக்குச் செய்த துரோகங்களுக்கு இவரும், நம்ம கலைஞரும் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் தான் போய்ச் சேரனும்!
மகாதிர் அடித்த ஆணியை ! மகாதிரே புடுங்க வேண்டிய கட்டாயம் ! இதைதான் கர்ம வினை என்பார்கள் ஆன்மீக வாதிகள் ! இன்றைய சூழ்நிலை , மக்கள் உணரவேண்டும் ,அடுத்து தலைவர்களும் உணரவேண்டும் பின் விளைவுகளை !