புரோட்டோன் தலைவர் பதவியிலிருந்து விலகினார் மகாதிர்

proton1முன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்  புரோட்டோன்  ஹொல்டிங்ஸ்  தலைவர்  பதவியிலிருந்து  விலகினார்.

இச்செய்தி  மகாதிரின்  வலைப்பக்கத்தில்  வெளியிடப்பட்டிருந்த  ஊடக  அறிக்கை  இதைத்  தெரிவித்தது.     அவரது  பதவிவிலகல்  கடிதம்  டிஆர்பி-ஹைகோம்  பெர்ஹாட்  நிர்வாக  இயக்குனர்  சைட்  பைசல்  அல்பாருக்கு  நேற்றே  அனுப்பப்பட்டு  விட்டதாகவும் அது  கூறிற்று.

இதுபோக,  மகாதிர்  பெட்ரோனாஸ்  தொழில்நுட்பப்  பல்கலைக்கழகத்தின்  வேந்தர்  பதவியையும்  துறந்திருக்கிறார்.

லங்காவி  மேம்பாட்டு  வாரிய(லாடா)  ஆலோசகர், தியோமான்  தீவு  மேம்பாட்டு  வாரியத்தின்  ஆலோசகர்  ஆகிய  பதவிகளிலிருந்தும்  அவர்  விலகிக்  கொண்டிருக்கிறார்.