டிஏபி மகஜர் தொடர்பில் அலி திஞ்சுமீது போலீஸ் விசாரணை

ali tiநேற்று  டிஏபி  அலுவலகம்  சென்று  ஒரு  மகஜர்  வழங்கிய  அலி  திஞ்சுமீதும்  அவரின்  சிவப்புச்  சட்டை  இயக்கத்தின்மீதும்,  ஜாரிங்கான்  மலாயு  மலேசியா(ஜேஎம்எம்)மீதும்   போலீஸ்  விசாரணை  செய்யும்.

அலி  திஞ்சு,  இயற்பெயர்  முகம்மட்  அலி   பஹாரோம்,  தன்  பரிவாரங்களுடன்  கூட்டமாக   டிஏபி  தலைமைச்   செயலாளர்  லிம்  குவான்  எங்  ரிம2.8 மில்லியனுக்கு  பங்களா  வீடு  வாங்கியது  குறித்து  மகஜர்  ஒன்றை  ஒப்படைப்பதற்காக  கோலாலும்பூரில்  உள்ள  டிஏபி  தலைமையகம்  சென்றிருந்தார்.

அப்போது  சட்டவிரோத  செயல்கள்  நிகழ்ந்தது  தெரிய  வந்துள்ளதாக  போலீஸ்  அறிக்கை  ஒன்று  கூறியது.

“மகஜரை  ஒப்படைக்கும்போது  கூட்டத்தில்  இருந்த  ஒருவர்  ஆற்றிய  உரை  நிந்தனைக்  கூறுகளைக்  கொண்டிருந்தது,  மிரட்டும்  வகையிலும்  இருந்தது”, என  அந்த  அறிக்கை  கூறிற்று.

அப்படிப்பட்ட  செயல்கள்  குற்றமாகக்  கருதப்படுவதால்  போலீசார்  விசாரிப்பர்.