எட்மண்ட் போன் தாய் சூன் ஆசியான் மனித உரிமைகள் அமைப்பில் 2016-2018 தவணைக்கான மலேசியாவின் புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருப்பதாக மலேசிய அரசாங்கம் இன்று அறிவித்தது.
இந்த அமைப்பில் மலேசியாவின் முதல் பிரதிநிதியாக இருந்தவர் ஷாப்பி அப்துல்ல. இவர் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில் அப்பதவியில் இருந்தார்.
போன் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டமும், ஆக்ஸ்ப்ர்ட் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
உண்மையாக நடந்தால் சரி.
சட்டமும் பட்டமும் இருந்து என்ன செய்வது? அரசாங்கத்துக்குக் காக்காய் பிடித்தால் அடுத்த முறை ஏதாவது ஒரு நாட்டுக்கு மலேசியத் தூதராகலாம்!
மனித உரிமை நேயத்துக்காக தைரியமாக உரிமைக்குரல் எழுப்பும் உங்களுக்கு இது சிறந்த தேர்வு!!! வாழ்த்துகள்!! தொடரட்டும் உங்கள் சேவை!!!