டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் லாவ் கியோங் யிஎங்கின் உறவினர் லாவ் ஜுங் ஹியன் நேற்றிரவு சாபா, செம்போர்னா கடற்பகுதியிலிருந்து கடத்தப்பட்ட நான்கு மலேசியர்களில் ஒருவராவார்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர், வோங் டெக் பெங் மற்றும் வோங் டெக் சீ ஆகியோரும் லவ்வின் உறவினர்களாவர். அவர்கள் சிபுவை சேர்ந்தவர்கள். நான்காவது நபர், வோங் ஹுங் சோங், அவர்களின் நண்பர்.
இந்த விவகாரத்தை விவாதிப்பதற்காக டிஎபி நாடாளுமன்றத்தில் ஓர் அவசர தீர்மானத்தை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை இந்த அவசர தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சரவாக் டிஎபி தலைவரும் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினருமான சோங் சியங் ஜென் தொடர்பு கொண்ட போது கூறினார்.
நாளை விவாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றும் நடக்காது– பணம் பட்டு வாடா ஒன்றால் நல்லது நடக்கலாம்– நடக்காமலும் போகலாம்.