பலர் தொழில் காரணங்களுக்காக வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொண்டிருக்கலாம் அதைக் குற்றமென்று சொல்ல முடியாது என இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
“நிறைய தகவல்கள் கசிந்துள்ளன. முழுவதும் இன்னும் தெரியவில்லை. மெஸ்ஸியின் பெயர்கூட உள்ளது.
“இதனாலேயே (கணக்கு வைத்திருப்பதால்) ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். தொழில் போன்ற காரணங்களுக்காக பலரும் வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்கள். சிலர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தொழிலில் ஈடுபட்டிருக்கக் கூடும்”, என கைரி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முந்தெரி கொட்டை, ……
அண்ணனுக்கும் வெளி நாட்டுல அக்கெளன்ட் இருக்கும் போல, அதான் இந்த சமாளிப்பு
கொள்ளை அடித்த பணத்தை எங்கு வைப்பது? எக்காலத்தில் இந்த ஈன ஜென்மங்கள் உழைத்து சம்பாதித்தனர்? சொல்லி சொல்லி எனக்கும் சீ என்றாகி விட்டது–நாம் என்ன சொன்னாலும் ஒன்றும் நடக்காது.
இவரின் நிர்வாகத்தின் கீழ் மில்லியன் கணக்கில் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்படுள்ளது ! அதற்க்கு என்ன பதில் சார் ???