பொதுக் கணக்குக்குழு (பிஏசி) 1எம்டிபிமீதான அதன் அறிக்கையைத் தயாரித்து விட்டது.
அடுத்த இரண்டு நாள்களில் அறிக்கை அச்சடிக்கப்பட்டு வியாழனன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பிஏசி உறுப்பினரும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி-யுமான டோனி புவா கூறினார்.
ஆனால், 1எம்டிபி மீதான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை எப்போது தயாராகும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
கேட்டதற்கு, “அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்”, என்றார்.