இன்று மாலை நாடாளுமன்ற கட்டடத்தின் வாயிற்கதவுக்கு வெளியில் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரஃபிஸி ரமலி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ரஃபிஸி கைது செய்யப்பட்டதை போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகார் உறுதிப்படுத்தினார். அரசு இரகசியத்தை வெளியிட்டதற்காக ரஃபிஸி அதிகாரத்துவ இரகசியச் சட்டம் (ஒஎஸ்எ) செக்சன் 8 இன் கீழ் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி கூறினார்.
லெம்பாகா அங்காட்தான் தெந்திராவுக்கும் 1எம்டிபிக்கும் இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் இரகசியமானவை என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணத்தை பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி கடந்த மாதம் அம்பலப்படுத்தினார்.
இவ்விவகாரம் குறித்து ரஃபிஸி போஸீஸ் வாணிகக் குற்ற விசாரணை இலாகாவிடம் ஒரு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இக்கைது குறித்து பிகேஆர் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா, “ஏன் போலீஸ் படை ரஃபிஸியை தானாகவே சரண்டையும்படி கேட்டுக்கொள்ள முடியாது என்று ஐஜிபி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்”, என்று டிவிட் செய்துள்ளார்.
ரஃபிஸி கைது செய்யப்பட்ட முறையை சிவராசா போலீசார் “கடத்தல் செய்வதற்கு” ஒப்பிட்டார்.
ரஃபிஸி ரமலின் கைதானது அவரே தேடிக் கொண்டது. அவர் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணத்தை வெளியிட்டதற்காக அதிகாரத்துவ இரகசியச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார் ஐஜிபி காலிட் அபு பாகார்.
அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவுகள் குறித்து பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஐஜிபி காலிட் மலேசியாகினியிடம் கூறினார்.
“ஏன் போலீஸ் மீது பழி போடுகிறீர்கள்? நாங்கள் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை மட்டுமே செய்கிறோம்”, என்று காலிட் மேலும் கூறினார்.
உண்மை சொன்னால் அம்னோ எவனுக்கு பொடிகது
உண்மையை நீதிமன்றத்தின் மூலமாக மக்களிடையே வெளிப்படுத்த ரபிசி எடுத்துக் கொண்ட முயற்சிக்குப் பாராட்டுக்கள். இவரை சட்டத்தின் முன் நிறுத்தும் பொழுது, அந்த இரசிய பாதுகாப்புச் சட்டத்தின் அரண் எது வரையில் அரசாங்க இரகசியங்களைப் பாதுகாக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவரும்.
நம்பிக்கை நாயகன் : நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைகள், என்ன மூளைதான் அறவே வேலை செய்ய மாட்டுது..!
தவறுதான் ஆனால்
போலிஸ் சட்டப் படியா நடக்கிறதா ?
கோடிக்கணக்கில் பணம் களவு போகிறது அது போலிஸ் கண்ணுக்கு தெரியவில்லை.
அடிக்கடி இதுபோன்ற கைதுகள் நடப்பது நல்லதுதான். உண்மையான போராட்டவாதிகளும், மக்கள் சேவையாளர்களுமே எதிர்தரப்பில் மிஞ்சுவர். தற்போது ரோட்டில் போறவனெல்லாம் எதிர்கட்சிகளின் கூடாரத்திற்குள் அடைக்க்கலாமாகிவிடுகிறான். எதிர்தரப்பு சின்னத்தில் தேர்தலில் நின்றால், எளிதாக வென்றுவிடலாம் என்கிற நப்பாசை. டி.எ.பி.தலைவர் ஒருவரின் மகள், அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. சென்ற பொதுத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். அப்பனும் YB மகளும் YB .