ஜொகூர் மந்திரி புசார் காலிட் நோர்டினை மாற்றும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறாது என ஜோகூர் அம்னோ இளைஞர் தலைவர் ஹஹாஸ்ரின் ஹஷிம் கூறினார்.
“ஜோகூர் எம்பி-யை மாற்றும் முயற்சி வீணான முயற்சி என்பதை ஜோகூர் அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்த விரும்புகிறது”, என ஹஹாஸ்ரின் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
காலிட்டைக் கவிழ்ப்பதற்கு முயற்சி நடப்பதாக நேற்றிலிருந்து பரவிவரும் வதந்தி குறித்து அவர் கருத்துரைத்தார்.
ஜோகூர் அம்னோ இளைஞர்கள் காலிட்டுக்குப் பக்கபலமாக உறுதியுடன் நிற்பார்கள் என்றாரவர்.
காலிட்டின் நிர்வாகத்தில் “மகத்தான காரியங்கள்” எல்லாம் நடந்தேறியுள்ளன என்று குறிப்பிட்ட ஹஹாஸ்ரின், 2014-இல் ஜோகூரின் மொத்த வருமானம் 6 விழுக்காடு உயர்ந்து ரிம93.7 பில்லியன் ஆனதைச் சுட்டிக்காட்டினார்.
யார் ஜோகூர் மந்தெரி புசாரை மாற்ற நினைகிறார்கள்???
நஜிப்பால் முடியாதது ஒன்றுமில்லை! வீண் முயற்சி என்பதைக்கூட வெற்றி முயற்சியாக்கும் திறமை அவருக்கு உண்டு! அதைத்தான் பார்க்கிறோமே!