பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சூழ்ந்துள்ள பல்வேறு ஊழல்களைச் சுட்டிக்காட்டும் வாஷிங்டன் போஸ்ட் அவரைவிட்டு ஒபாமா நிர்வாகம் விலகி இருப்பதே நல்லது என நினைக்கிறது.
ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ விவகாரத்தில் நஜிப் குற்றம் எதுவும் புரியவில்லை என மலேசியாவின் சட்டத்துறைத் தலைவர் கூறி இருந்தாலும் நஜிப்பால் உருவாக்கப்பட்ட 1எம்டிபியில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதை மற்ற நாடுகளின் புலன் விசாரணைகள் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருப்பதாக போஸ்ட் நேற்று அதன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
“மலேசிய ஊழலில் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அராபியா, சிங்கப்பூர்,,அமெரிக்கா ஆகிய நாடுகளின் நிதியாளர்களும் மேற்கத்திய பெரிய வங்கிகள் சிலவும் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
“முக்கியமாக நஜிப்பே சட்ட, அரசியல் விளைவுகளை எதிர்நோக்கும் சாத்தியமும் இருப்பதுபோலத் தோன்றுகிறது”, என தலையங்கம் கூறிற்று.
நஜிப் அடக்குமுறையைப் பயன்படுத்திக் குற்றச்சாட்டுகளை ஒடுக்கப்பார்க்கிறார் என்று போஸ்ட் கூறியது. முகைதின் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையும் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலின் பணிக்காலம் திடீரென்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையும் எந்த நிந்தனைச் சட்டத்தை அகற்றப்போவதாக முன்பு நஜிப் வாக்குறுதி அளித்திருந்தாரோ அந்த நிந்தனைச் சட்டத்தின்கீழ் 15 பேர் குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும் அது சுட்டிக்காட்டியது.
“இவையெல்லாம் தோல்வி காணும் முயற்சியாகவே தெரிகிறது. மலேசிய விசாரணையாளர்களைத் தடுக்க முடிந்தாலும் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து முயன்று பணம் எப்படி திசை திருப்பி விடப்பட்டது என்பதை அம்பலப்படுத்துவார்கள்”, என அந்த நாளேடு கூறிற்று.
பெரும்பாலான தலைகள் எதைப்பற்றியும் அதிகமாக அலட்டிகொல்வது இல்லை– அதுதான் ராஜதந்திரமாம். ஒரு தி… பயலை திருடன் என்று கூற ஏன் தயக்கம்? ஒரு கோழி திருடன் உடனடியாக கம்பி எண்ணுகிறான் ஆனால் நாட்டையே கொள்ளை அடித்து அனுபவிக்கும் ஜென்மங்கள் உலகையே வளம் வந்து கொண்டிருக்கிறது– இது தான் மூன்றாம் உலகம்
நாட்டையே கொள்ளையடித்தவனை உடனடியாகக் கம்பி எண்ண வைத்தால் கம்பியோடு சேர்த்து தப்பித்து விடுவான்! அப்புறம் ஜெயிலைக் காணோம் என்று வடிவேலுவை போல காவல் துறைக்குப் புகார் செய்ய வேண்டி வரும்!