பாண்டான் எம்பி ரபிஸி ரம்லிமீது கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரத்துவ இரகசியச் சட்ட(ஒஎஸ்ஏ)த்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
பிகேஆர் உதவித் தலைவரும் தலைமைச் செயலாளருமான ரபிஸி ஓஎஸ்ஏ-இன்கீழ் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணம் ஒன்றை வெளிப்படுத்தியதாகவும் கைவசம் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் மார்ச் 24-இல் அவர் அந்த ஆவணத்தை வெளிப்படுத்தினார் என்றும் மார்ச் 28-இல் அதே இடத்தில் அந்த ஆவணத்தைக் கைவசம் வைத்திருந்தார் என்றும் கூறப்பட்டது..
ரபிஸி குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
செஷன்ஸ் நீதிபதி சுல்கர்னேன் ஹசான் சம்பந்தப்பட்ட இரகசிய ஆவணத்தை ஏப்ரல் 14-இல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு ஏப்ரல் 29-இல் விசாரணை தேதியை அறிவிப்பதாகக் கூறினார்.
பின்னர், நீதிபதி ரிம3,000 ரொக்கம் ஒரு நபர் உத்தரவாதத்தில் ரபிஸியைப் பிணையில் விடுவித்தார்.
அரசாங்கம் யார் யாரையோ அனாவசியமாக கைது செய்கிறது ஏன் துன் மகாதிரை கைது செய்ய மாட்டேங்கிறது?மகாதிரை கண்டால் அவ்வளவு பயமா? அரசாங்கத்துக்கு தில் இருந்தால்……இருந்துட்டாலும்…….
காகாதிமிரை கைது செய்தால் அம்னோவின் எதிர்காலம் பாதிக்கப்படும்– ஆனாலும் பிரதமனின் 4 பில்லியன் சிலரின் வாயையும் கையையும் கட்டி போடலாம். பாலத்தை கடப்பதும் கடக்காததும் பாலத்தை அடைந்த பின் தான் கூறமுடியும்.
காக்காவின் சேவை ஆட்சி மாற்றத்திற்கு தேவை என முடிவுகட்டி ஆதரவு கூடி வருகிறதே. துன் பட்டம் வேறு துணையிருக்கிறதே.