கருவூலத் தலைவர்: 1எம்டிபி ஆலோசனை வாரியம் கூட்டம் நடத்தியதே இல்லை

Irwan

1எம்டிபி  ஆலோசனை  வாரிய  உறுப்பினர்கள்  கூடிப்  பேசியதே  இல்லை.  எனக்  கருவூலத்  தலைமைச்  செயலாளர்  இர்வான்  சிரிகார்  பொதுக்  கணக்குக்  குழுவிடம்  கூறியுள்ளார்.

1எம்டிபி  மீதான  பொதுக்  கணக்குக்  குழுவின்  விசாரணை  குறிப்பேடு(Hansard)  இதனைத்  தெரிவிக்கிறது.

1எம்டிபி  ஆலோசனை  வாரியத்தின்  உறுப்பினர்களில்  ஒருவரான  இர்வான், அந்நிறுவனத்தின்  இயக்குனர்  வாரியத்துக்கு  தொழில்,  முதலீடு  போன்ற  விவகாரங்களில்  ஆலோசனை  கூறுவதே  ஆலோசனை  வாரியத்தின்  பணி  என்றார்.

“ஆனால், அது  இதுவரை  எங்கள்  ஆலோசனையை  நாடியதே  இல்லை”, என்றவர்  2015,  மே  19-இல்  கூறினார்.

அதைக்  கேட்டு  பிஏசி  உறுப்பினர்கள்  அதிர்ச்சி  அடைந்தனர்  என்று  குறிப்பேடு  கூறியது.