மகாதிருக்கு எதிராக நான்கு விசாரணை அறிக்கைகள்

yrsayparangபோலீசார்  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  எதிராக  நான்கு  விசாரணை  அறிக்கைகளைத்  தயாரித்து  வருவதாக  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  இன்று  தெரிவித்தார்.

விசாரணை  அறிக்கைகள்  வெளிநாடுகள்  தலையிட  வேண்டும்  என்று  மகாதிர்  கேட்டுக்கொண்டாரே  அது  தொடர்பானவையா  என்று  வினவியதற்கு  அவர்  நேரடியான  பதிலை  வழங்கவில்லை.

“மகாதிருக்கு  எதிராக  நான்கு  விசாரணை  அறிக்கைகள்  தயாரிக்கப்பட்டு  வருகின்றன.

“சில  இன்னும்  முழுமை  பெறவில்லை. சட்டத்துறைத் தலைவருடன்  விவாதித்துக்  கொண்டிருக்கிறோம்”,  என  இன்று  காலை  புக்கிட்  அமானில்  செய்தியாளர்  கூட்டத்தில்  காலிட்  கூறினார்.