ரயானி ஏர் விமானச் சேவை மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

airஇன்று  தொடங்கி  மூன்று  மாதங்களுக்கு ரயானி  ஏர்  விமானச்  சேவை  தற்காலிகமாக  நிறுத்திவைக்கப்படுவதாக  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  தலைமை  இயக்குனர்  அஸாருடின்  அப்துல்  ரஹ்மான்  கூறினார்.

மே  17-இல்  ஒரு  விசாரணை  நடத்தப்படும்  என்றும்  அதில்  ரயானி  ஏர்  விளக்கமளிக்கலாம்  என்றும் அவர்  சொன்னார்.

தொடங்கப்பட்டு  நான்கே  மாதங்கள்  ஆகும்  அந்த விமான  நிறுவனத்தின்  குறைபாடுகள்  என்னவென்பதை  எடுத்துரைக்க  அஸாருடின்  மறுத்து  விட்டார்.