இன்று சரவாக் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் (இசி) சரவாக் மாநிலத் தேர்தல் பற்றி விவாதிப்பதற்காக வியாழக்கிழமை சிறப்புக் கூட்டமொன்றை நடத்துகிறது.
அதில் வேட்பாளர் நியமன நாள், வாக்களிப்பு நாள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றியெல்லாம் முடிவெடுக்கப்படும் என இசி செயலாளர் அப்துல் கனி சாலே கூறினார். கூட்டத்துக்கு இசி தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா தலைமை தாங்குவார்.
கூட்டத்துக்குப் பின்னர் இசி தலைவர் செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவார்.
சட்டமன்றம் கலைக்கப்பட்டு 60 நாள்களுக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும்.
இது சரவாக்குக்கு 11வது தேர்தலாகும்.

























