இந்து சங்கம்: ஜாகீர் சொற்பொழிவு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளப்பட்டது எப்படி?

sangமுஸ்லிம்  ஆன்மிகப்  பேச்சாளர்  டாக்டர்  ஜாகீர்  நாயக்கின்    சொற்பொழிவுக்கு  முதலில்  அனுமதி  மறுக்கப்பட்டு  பின்னர்  அதில்  சமரசம்  காணப்பட்டதாக  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறியிருப்பது  எப்படி  என்று  கேள்வி  எழுப்பும்  மலேசிய  இந்து  சங்கத்  தலைவர்  மோகன்  ஷான்,  மஇகா-வும்  அதற்கு  இணக்கம்  தெரிவித்ததா  என்று  வினவினார்.

“யுடெம்(யுனிவர்சிடி டெகினிகல்  மலேசியா)-மில் ஜாகீரின்  சொற்பொழிவுக்கு  அரசாங்கம்  பச்சை  விளக்குக்  காண்பித்திருப்பதாக    துணைப்  பிரதமர்  அறிவித்தார்.

“அரசாங்கத்தில்  அங்கம்  பெற்றுள்ள  மஇகாவே  இந்து  சங்கத்துடனும்  மற்ற  என்ஜிஓ-களுடனும்  சேர்ந்து  ஜாகீரின்  பொதுச்  சொற்பொழிவுகளுக்குக்  கடும்  எதிர்ப்பைத்  தெரிவித்திருக்கும்போது  அரசாங்கம்  எப்படி  இம்முடிவுக்கு  வந்தது?”,  என  மோகன்  ஷான்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.