1எம்டிபி- ஐபிஐசி- ஆபார் சம்பந்தப்பட்ட பல பில்லியன் டாலர் விவகாரத்தை மூடிமறைத்ததற்காக 1எம்டிபி தலைவர் அருள் கந்தா கந்தசாமிமீது விசாரணை நடத்த வேண்டும் என்று டிஏபி எம்பி டோனி புவா கூறியுள்ளார்.
மொத்தம் யுஎஸ்$3.51 பில்லியன் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் பதிவுசெய்யப்பட்ட ஆபார் இன்வெஸ்ட்மெண்ட் பிஜேஎஸ்(ஆபார் பிவிஐ)-க்கு மாற்றிவிடப்பட்டது அருள் கந்தா 1எம்டிபிக்குப் பொறுப்பேற்பதற்கு முன்பு என்பதை புவா ஒப்புக்கொண்டார். என்றாலும் அருள் பொய்யான பிவிஐ பற்றி அறிந்தே இருந்தார் என்றாரவர்.
ஆபார் பிவிஐ 2015 ஜூனில் அதாவது அருள் கந்தா அரசுக்குச் சொந்தமான நிறுவனத்துக்குப் பொறுப்பேற்ற ஆறாவது மாதத்தில் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது.
1எம்டிபி-இடமிருந்து மொத்தம் யுஎஸ்$3.51 பில்லியனைப் பெற்றுக்கொண்ட ஒரு நிறுவனம் திடீரென்று இல்லாமல் போனது பற்றி அருள் கந்தா எப்படி அறியாதிருக்க முடியும் என்று புவா வினவினார்.
ஆபார் பிவிஐ இப்போது செயல்படவில்லை என்பதால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் யுஎஸ்$3.51 பில்லியனுக்கு இப்போது கணக்கு இல்லை, அது காணாமல்போன பணமாகிவிட்டது.
“1எம்டிபி ஆபார் பிவிஐ-உடன் கையொப்பமிட்ட எல்லா உடன்பாடுகளும் செல்லாமல் போய் விட்டதாக தலைமைக் கணக்காய்வாளர் கூறுகிறார்.
இத்தகவலை அருள் மலேசியர்களிடம் மறைத்தது ஏன்? அந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
“அருள் கந்தா 2015 ஜனவரியில் அதாவது ஆபார் பிவிஐ செயல்பாட்டை நிறுத்திகொள்வதற்கு ஆறு மாதங்களுக்குமுன் 1எம்டிபி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அவர் இத்தகவலை மூடிமறைத்திருந்தால் மோசடிக்கு உடந்தை என அவர்மீது விசாரணை நடத்த வேண்டும்”, என புவா கூறினார்.
பழி ஓரிடம் பாவம் ஓரிடம்!
குட்டையை கொழபினால் தானே மீன் மேலே தெரியும்.
மூடி மறைக்க வேண்டியது அவர் வேலை! அதற்காகத்தான் அவருக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது!அதனைச் சிறப்பாக செய்துவிட்டு அவர் கழன்று கொண்டார்! இனி அவரைப் பிடிக்க முடியாது!
அருள் உண்மையை சொல்லவேண்டியது தானே? முடியுமா? அல்தான் துயா கதிதான்.
யாரும் தான் செய்த தவறை அத்தனை எளிதில் மறைத்து ஏமாற்றிவிடமுடியாது. யாருமறியாமல் செய்த பிழை என்றாலும் அவன் நிச்சயம் தன்னாலேயே ஒருநாள் கட்டிக்கொடுக்கப்பட்டுவிடுவான். இது கூட்டு களவாணித்திட்டம்தானே. உண்மை கூடியவிரைவில் வெளிக்கொணரப்படும்.