துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முகைதின் யாசின், பிரதமர் பதவியிலிருந்து நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் விலகி அஹமட் ஜாஹிட் ஹமிடி அப்பதவிக்கு வருவதை ஆட்சேபிக்கப்போவதில்லை என்றார்.
நேற்றிரவு 100 பேர் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்றில் பேசிய முகைதின், முதலில் குடிமக்கள் பிரகடனத்தின் கோரிக்கையை ஏற்று நஜிப் பதவி விலகுவாரா என்று பார்ப்போம் என்றார்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் எதிரணியினருடன் சேர்ந்து மேற்கொண்டிருக்கும் இயக்கத்தின் நோக்கம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
“நாங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்புவதாகக் கூறப்படுகிறது”.
ஆனால் தங்கள் நோக்கம் அதுவல்ல என்றாரவர்.
“(நடப்பு) பிரதமர் பதவி விலகி நாடு காப்பாற்றப்பட வேண்டும். அதைத்தான் விரும்புகிறோம்”, என முகைதின் குறிப்பிட்டார்.
ஒரு திருடனுக்கு இன்னொரு மடையன் தானே சமம். எல்லாம் இந்த இன அரசியலினால் வந்த வினை–அத்துடன் மலாய்க்காரன் அல்லாதவர்கள் என்னமோ எதிரிகள் போல் காண்பித்து இந்த நாட்டின் இன ஒற்றுமையையே அழித்து விட்டான்கள்.
நன்கு படித்த,ஆங்கிலம் புலமை பெற்ற, இனம் மதம் பார்க்காத,நேர்மையான, கை சுத்தம் கொண்ட யாராக இருந்தாலும் வழி நடத்துவதில் சுமுக பொறுப்பு இருக்குமாயின் பிரதமர் ஆவதில் எந்த சங்கடமும் இல்லை.
ஜாஹிட்டுக்கு பிரதமர் ஆசையை தூண்டி விடுகிறார் முன்னாள் துணை பிரதமரும் ,முதலில் நான் இஸ்லாமியன் ,பிறகு மலாய்காரன் ,அதன் பிறகுதான் நான் மலேசியன் என்று கேனத்தனமாக சொன்ன முஹிடின் !
வேறு என்ன வழி..பிரதமர் பதவி விலகினால் முறைப்படி துணைப் பிரதமர்தான் தலைமை ஏற்ட்க வேண்டும். முகைதீன் ஆதரவு கொடுத்து தானே ஆகவேண்டும்…!
இண்டொன்??????????????????
அமீனோ கட்சி ஒரு நெறி இல்லாத கட்சி என்பதற்கு இவர்களெல்லாம் சிறந்த முன் உதாரணம். முஹீடின் சொல்கிறார், ஹமிட் அது முஹிடின் முடிவு அல்ல நஜிப்பின் முடிவைப் பொறுத்தது என்று பதில் சொல்லுவதில் இருந்து தான் தலைமைப் பதவி ஏற்கத் தயார் என்பதை சொல்லாமல் சொல்லுகின்றார். பகாங்கில் ஒரு மரம் சாய்ந்தது போல அந்த மண்ணின் ஒரு தலையும் விரைவில் உருளப் போகின்றது என்பதற்கு இது முன் அறிகுறியோ!யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே.
‘தெரிந்த தேவதையைவிட தெரியாத சாத்தானே மேல்’ என்று முகைதின் நினைக்கிறார் போலும்.
‘PUTRAJAYA’ – ‘BANGLAJAYA’-வாகவும் ;
‘BUMIPUTRA’ – ‘BANGLAPUTRA’-வாகவும்,
மாற முகைதின் யாசின் பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.