விவாதமிட தயரா என்று டிஏபி எம்பி டோனி புவா விடுத்த சவாலை 1எம்டிபி தலைவரும் தலைமை செயல்முறை இயக்குனருமான அருள் கந்தா கந்தசாமி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
“சவாலை நான் ஏற்கிறேன். விவாதத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்”, என்று அருள் கந்தா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“ஒன்று தெளிவாகத் தெரிகிறது, பிஏசி (பொதுக் கணக்குக் குழு) விசாரணையின்போது இரண்டு நாள்கள் துருவித் துருவி கேள்விகள் கேட்ட பின்னரும் டிஏபி எம்பிக்கு திருப்தி இல்லை, இன்னும் சிறிது நேரம் என்னுடன் செலவிட விரும்புகிறார். அதுதான் புவாவுக்கு மகிழ்ச்சி தருமென்றால் அதை நான் மறுக்க மாட்டேன்”, என்றாரவர்.
அதுதான் சரி ஏற்பாடு செய்யுங்கள்