மகாதிர்- நஜிப் சச்சரவில் தெங்கு ரசாலி நடுநிலை

ku liமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்குமிடையில்   நடைபெறும்  தகராற்றில்  தாம்  எத்தரப்பையும்  ஆதரவிக்கவில்லை  என்பதை  குவா  மூசாங்  எம்பி  தெங்கு  ரசாலி  ஹம்சா   மீண்டும்  வலியுறுத்தினார்.

ஆனால்,  தாம்  எப்போதும்  கட்சி  ஆள்  என்றும்  அம்னோ  சட்டத்தை  மீறாதவரை  தம்  ஆதரவு  அம்னோவுக்குத்தான்  என்றும்  அவர்  சொன்னார்.

“நான்  யாரையும்  ஆதரிக்கவில்லை.  நான்  அம்னோ  உறுப்பினர். என்  ஆதரவு  கட்சிக்குத்தான். இருவருக்கும்   கருத்தொற்றுமை  இருக்கலாம்,  அதற்காக  இப்போது  கட்சியில்  இல்லாத  ஒருவரை  எப்படி  நான்  ஆதரிக்க  முடியும்?

“அம்னோ  என்ன  தீர்மானிக்கிறது  என்று  பார்ப்பேன். அது சட்டத்தை  மீறுவதாக  இருந்தால்,  நான்  ஒரு  எம்பி  கூட்டரசு  அரசமைப்பைக்  காப்பதாக  சத்திய  பிரமாணம்  செய்திருக்கிறேன்,  உண்மைக்கு  எதிரானதை  ஆதரிக்க  மாட்டேன்”, என்று  சினார்  ஹரியானிடம்  தெங்கு  ரசாலி  கூறினார்.